இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் தொடரில் விளையாட தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த பயிர்ச்சி போட்டியில் இந்திய அணி மற்றும் இந்திய ஏ அணி மோதுகிறது. இதில் முக்கிய வீரர் கே எல் ராகுலுக்கு காயம்.
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் படு தோல்வியடைந்த விரக்தியில் ஆஸ்திரேலியா உடனான போட்டியில் 4 போட்டிகள் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய ஏ அணியுடன் விளையாட மாட்டோம் என்று கூறியிருந்தனர்.
ஆனால் தற்போது தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிசிசிஐ யிடம் கோரிக்கை வைத்து மீண்டும் இந்த இந்திய ஏ உடனான பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய ஏ அணியும் இந்திய அணியின் மூத்த வீரர்களும் மோதுகிறது. இந்த பயிற்சி போட்டியில் முக்கிய வீரரான கே எல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டு பெவிலியன் திரும்பினார்.
இதனால் இந்திய அணி சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்திய ஆஸ்திரேலியா தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி வரும் நிலையில் தொடக்க வீரராக கே எல் ராகுல் களமிறங்குவார் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது பயிற்சி ஆட்டத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே இவர் இந்த தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.