அண்ணாமலையின் நடைப்பயணத்திற்கு எடப்பாடிக்கு அழைப்பு!! உரசல்கள் உறவாக மாறியதா??

0
95
Edappadi or not in the walking festival of Annamalai!! what happened?
Edappadi or not in the walking festival of Annamalai!! what happened?

அண்ணாமலையின் நடைப்பயணத்திற்கு எடப்பாடிக்கு அழைப்பு!! உரசல்கள் உறவாக மாறியதா??

அடுத்த ஆண்டு வரக்கூடிய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெரும் வெறியோடு பாஜக தீவிரமாக தனது தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறது.

அந்த வகையில், பாஜகவின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டத்தை அனைவரிடமும் பெருமைப்படுத்தும் நோக்கோடு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 234  தொகுதிகளுக்குமே பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார். இவரின் நடைபயணம் ஜூலை 28 ஆம் தேதி துவங்க உள்ளது.

பிரதமர் மோடி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட போகிறார் என்று கூறுவதற்கு ஏற்ப இவரின் நடைப்பயணம் திருசெந்தூரில் இருந்து ராமேஸ்வரம் செல்ல இருக்கிறது.

 இவரின் நடைப்பயணம் ஜூலை 28 ஆம் துவங்கி ஜனவரி மாதம் 11 ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் முடிவடைய இருக்கிறது. அடுத்த ஆண்டு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த 168 நாட்கள் கொண்ட நடைப்பயணம் அமையும் என்று பாஜக கட்சி நம்பிக்கையாக இருக்கிறது.

இதனை துவக்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தர இருக்கிறார். இவரைத்தொடர்ந்து பாஜக கட்சியின் சார்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.

என்னதான் இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணியாக இருந்தாலும் அண்ணாமலைக்கும் எடப்பாடிக்கும் உரசல்கள் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது.

இதற்கு உதாரணம், அண்ணாமலை வருகின்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால் அதிமுக வலுவாக இருக்கும் பகுதிகள் கொங்கு மண்டலம் தான். எனவே, இதை பாஜக விற்கு கொடுத்துவிட்டு அதிமுக என்ன செய்வது என்று எடப்பாடி கொந்தளித்து வருகிறார்.

Previous articleசந்திரமுகி 2 படத்தில் நடித்த கதாபத்திரங்கள் மரண பயத்தில் பல இரவுகள்  தூங்கவில்லை? கீரவாணி ட்விட்!!
Next articleமார்கெட் ரேஞ்சுக்கு ஏத்த மாறி சம்பளம் வாங்கும் யோகிபாபு!! சொத்துமதிப்பு மட்டும் இவ்வளவா??