அமெரிக்காவின் மாகாணமான கலிபோர்னியாவின் காட்டு தீயினால் பல பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த காட்டுத்தீயானது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியின் கடற்கரை பகுதியில் முதலில் தொடங்கியது. பலத்த காற்று காரணமாக அடுத்தடுத்து அருகில் உள்ள பகுதிகளில் பரவியது. அருகில் உள்ள மலை பகுதிகளுக்கு இந்த காட்டு தீயானது பரவியது.
அங்கு லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் சிக்கலான சூழலில் திணறி வருகின்றனர். அங்கு தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அங்கு உள்ள லட்சகணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஏராளமான குடியிருப்பு இடங்கள் தீயில் எரிந்து சாம்பல் ஆகின.
வெளியேற்றப்பட்ட அனைத்து மக்களும் பாதுகாப்பான இடத்திற்கு கூட்டி செல்லப்பட்டனர். அந்த காட்டு தீயை அணைக்க 250 க்கும் மேற்பட்ட தீயணைப்பு குழுக்கள் அழைத்து வரப்பட்டு தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர். அமெரிக்க வரலாற்றில் இதுவரை காணாத பேரழிவு என ஜோ பைடன் அறிவித்துள்ளார். இது அடுத்தடுத்து ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் பரவி வருவதாகவும் ஹாலிவுட் பிரபலங்கள் வீடுகள் அழியும் நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது. ஹாலிவுட் அடையாளங்கள் திரையரங்குகள் அழியும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.