இஸ்லாம் மதத்திற்கு மாறாவிட்டால் 70 துண்டுகளாக வெட்டிவிடுவேன்..மிரட்டல் விடுத்த காதலன்!

0
176

லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலன் தனது காதலியை இஸ்லாம் மதத்திற்கு மாறாவிட்டால் 70 துண்டுகளாக வெட்டிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

சமீபகாலமாக காதலன் தனக்கு இடையூறு ஏற்படுத்தினாலோ அல்லது காதலி தனக்கு இடையூறு ஏற்படுத்தினாலோ அவர்களை கொலை செய்துவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. காதலனை வெட்டி காதலி பிரியாணி சமைத்தது, காதலியை வெட்டி காதலன் சூட்கேசில் அடைத்தது போன்ற பல செய்திகளை நாம் கேட்டறிந்து வருகிறோம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்கிற பெண்ணை அவரது லிவிங் பார்ட்னர் 35 துண்டுகளாக வெட்டி ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு இடங்களிலும் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் டெல்லியில் மற்றொரு சம்பவம் இதேபோன்று அரங்கேறியிருந்தது. டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை மகனுடன் சேர்ந்து 22 துண்டுகளாக வெட்டி வீசியெறிந்துள்ளார்.

இதுபோன்று அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துவரும் சமீபத்தில் காதலன் ஒருவர் அவரது காதலியை இதுபோன்ற சம்பவங்களை கூறி கொன்றுவிடுவதாக மிரட்டிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. மராட்டிய மாநிலத்தின் துலே என்கிற பகுதியை சேர்ந்தவர் அர்ஷத் மாலிக், சில மாதங்களுக்கு இவருக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது, அவரது கணவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதனால் தனிமையில் வாழ்ந்து வந்த அந்த பெண் அஷ்ரப் உடன் திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ முடிவு செய்து வாழ்ந்து வந்தார்.

அந்த பெண்ணுடன் வாழ்வதற்காக அஷ்ரப் தனது பெயரை மாற்றி கூறி அறிமுகமாகி இருக்கிறார், சில நாட்களை கழித்து தான் அந்த பெண்ணுக்கு அஷ்ரப்பின் உண்மையான பெயரும், அவர் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர் என்றும் தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த பெண் அதைப்பற்றி கவலைப்படாமல் அஷ்ரப் உடன் வாழ்ந்து வந்தார், இந்நிலையில் அஷ்ரப் அந்த பெண்ணையும் அவரது குழந்தையையும் இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்தியுள்ளார், அதனை அந்த பெண் மறுக்க அவரை சித்ரவதை செய்துள்ளார். மேலும் நீ இஸ்லாம் மதத்திற்கு மாறாவிட்டால் ஷ்ரத்தாவை வெட்டி கொலை செய்ததை போல நான் உன்னை 70 துண்டுகளாக வெட்டி கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் இதுகுறித்து போலீசில் புகாரளிக்க, தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleமரணத்தில் முடிந்த லிங்க் டூகேதர் சந்திப்பு.. காவல்துறையினர் விசாரணை..!
Next articleதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!