மரணத்தில் முடிந்த லிங்க் டூகேதர் சந்திப்பு.. காவல்துறையினர் விசாரணை..!

0
103

இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா. இவர் கொடைக்கானல் பகுதியில் உள்ள தனியார் விடுதியை ஒப்பந்தத்திற்கு எடுத்து நடத்தி வந்தார். அவரது விடுதி அருகே சென்னையை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண் வசித்து வந்தார்.இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

திருமணம் செய்து கொள்ளாமலே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். சூர்யாவின் பழக்க வழக்கம் பிடிக்காததால் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.சூர்யாவின் தொலைப்பேசி எண்ணையும் பிளாக் செய்துள்ளார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் கல்லுக்குழி பகுதியில் மாத வாடகைக்கு வீடு எடுத்து தங்கிய அவர் மீண்டும் பம்பார்புரம் பகுதிக்கு வந்துள்ளார்.

அங்குள்ள பள்ளி ஒன்றில் யோகா ஆசிரியராக பணியாற்றினார். சில நாட்களுக்கு முன் அவர் சூர்யாவின் எண்ணை அன்பிளாக் செய்துள்ளார். இருவரும் குறுந்தகவல்கள் மூலம் பேசி வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவதன்று உணவு திண்பண்டங்களுடன் சூர்யாவை காண வந்துள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஸ்வேதா தனது ஆண் நண்பர்களை அழைத்துள்ளார்.இருவருக்கும் இடையே சண்டையை விலக்கிய போது அவர் எதிர்பாராத விதமாக படியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை மீட்ட மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஸ்வேதா மற்றும் அவரது ஆண் நண்பர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சூர்யாவின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்