உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது.இதை இரத்த சோகை என்று அழைக்கிறார்கள்.இன்று அதிகமானோர் இரத்த சோகையை எதிர்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக இந்தியாப் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
இரத்த சோகை அறிகுறிகள்:
1)மூச்சுத் திணறல்
2)தலைவலி
3)மயக்கம்
4)உடல் சோர்வு
5)பலவீன உணர்வு
6)முறையற்ற இதயத் துடிப்பு
7)முடி உதிர்வு
8)கை,கால் தோல் உரிதல்
இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் போது உடல் சோர்வு ஏற்படும்.உள்ளங்கை மற்றும் கை,கால்களில் தோல் உரிந்தால் இரத்த சோகைக்கான அறிகுறிகளாகும்.உங்களுக்கு தொடர்ந்து தலைவலி,மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்தால் இரத்த சோகை இருப்பதற்கான அறிகுறிகளாகும்.
இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்தால் அலட்சியம் செய்யாமல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.அதோடு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து செய்து வரவும்.
வீட்டு வைத்தியம்:
1)முருங்கை இலை
2)தேன்
ஒரு கைப்பிடி முருங்கை இலையை காயவைத்து பொடியாக்கி பாட்டிலில் சேமித்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு முருங்கை கீரை பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்தால் இரத்த சோகை பிரச்சனை சரியாகும்.
1)இஞ்சி துருவல்
2)தேன்
ஒரு பாத்திரத்தில் துருவிய இஞ்சி இரண்டு தேக்கரண்டி சேர்க்கவும்.பிறகு இரண்டு தேக்கரண்டி தேன் ஊற்றி கலந்து விடவும்.அதன் பிறகு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை ஊற்றி கலக்க குடிக்கவும்.இப்படி செய்வதால் இரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.அதேபோல் எலுமிச்சை சாறை சுடுநீரில் சேர்த்து கலந்து குடித்தால் இரத்த சோகைக்கு பலன் கிடைக்கும்.