அனன்யாவின் உயிரைப் பறித்த தாய்! ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

0
187

அனன்யாவின் உயிரைப் பறித்த தாய்! ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அருகே குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் போட்டு வைத்த பெற்றோர்கள் தெரியாமல் தொட்ட குழந்தை மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆம்பூர் ரெட்டி தோப்பு என்ற பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் -பவித்ரா தம்பதியர். இவரது மகள் அனன்யா. அனன்யாவுக்கு வயது ஒன்று.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தாய்வீடு சென்ற பவித்ரா இங்கேயே ஒரு நான்கு நாட்கள் இருப்பதற்காக முடிவு செய்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று காலை பவித்ரா குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டரை போட்டுவிட்டு மற்ற வேலைகளை கவனிக்க சென்றுள்ளார். அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அனன்யா மின்சாரம் என தெரியாமல் கை வைத்ததும் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டுள்ளார்.

அனன்யாவின் உயிரைப் பறித்த தாய்! ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பவித்ரா மற்றும் அவரது உறவினர்கள் வந்து பார்த்த பொழுது குழந்தை சுருண்டு விழுந்து இருந்தது.

அவர்கள் குழந்தையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் குழந்தை மருத்துவமனைக்கு  கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி காவல் நிலைய போலீசார் குழந்தை உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் சிறு வயது குழந்தை இருக்கிறது என்று தெரிந்தும் வாட்டர் ஹீட்டரில் குளிப்பதற்காக தண்ணீர் போட்டுவிட்டு அருகேயே நிற்காமல் வெளியே வேலை பார்த்துக்கொண்டிருந்த தாயின் கவனக்குறைவால் இந்த ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

Previous articleநூலிலையில் வெற்றியை தவறவிட்ட இங்கிலாந்து அணி
Next articleகரீபியன் லீக் : ஆன்ட்ரே ரஸ்ஸலின் அரைசதம் வீண்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here