கரீபியன் லீக் : ஆன்ட்ரே ரஸ்ஸலின் அரைசதம் வீண்

0
192

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

அந்த வகையில் மேற்கு இந்திய தீவு அணியில் நடைபெறும் கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் ஜமைக்கா அணியும், நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஜமைக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக காலின் மன்ரோ 63 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய ஜமைக்கா அணி  6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஸ்ஸல் 23 பந்துகளுக்கு 50 ரன்கள் குவித்தார். இதனால் நைட் ரைடர்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Previous articleஅனன்யாவின் உயிரைப் பறித்த தாய்! ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
Next articleதோல்வியே சந்திக்காத வீரர் தொடர்ச்சியாக இத்தனை வெற்றியா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here