தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை!! கழுத்தை நெறிக்கும் தமிழக அரசு!!

0
165

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முழு கட்டண தொகையை வசூலிக்கின்ற தனியார் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

முன்னதாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தின் தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது என்று, தமிழக பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று,ம் பேருந்து மற்றும் சீருடை ஆகிய கட்டண தொகையில் இருந்து விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் கட்டணங்களை செலுத்தாத மாணவர்களை இணைய வகுப்பில் இருந்து நீக்க அதிகாரம் இல்லை. அப்படி நீக்கப்படுவதாக புகார்கள் வரும் பட்சத்தில் அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவை மீறி பல்வேறு தனியார் பள்ளிகள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களை கட்டாயப்படுத்தி வருவதாக பள்ளிக்கல்வித் துறைக்கு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று முழு கட்டணத்தை செலுத்த வற்புறுத்துகின்ற தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது.

இத்தகைய சூழலில், “பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 100% கட்டாய கல்வி கட்டணம் வசூலிக்கின்ற தனியார் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள எண்ணம் கொண்டிருப்பதாகவும், அத்துடன் நான்கு நாட்களில் அரசுப்பள்ளியில் 1500 மாணவர்கள் சேர்ந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleதொடர்ந்து சரியும் தங்கவிலை!! இன்றே வாங்கிட ஆர்வம், இல்லத்தரசிகள் விறுவிறுப்பு!!
Next articleதமிழக அரசுக்கு வந்த சோதனை! இந்த ஆட்சி விரைந்து செயல்படுமா?