10 12 மாணவர்களின் ஸ்பெஷல் கிளாஸ் குறித்து அன்பில் மகேஷ் வெளியிட்ட குட் நியூஸ்!
கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர திறக்கப்படவில்லை. பகுதி நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் எடுக்கப்பட்டது. தடுப்பூசி கண்டறிவதற்கும் முன் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் ஓரிரு வாரங்களிலேயே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அதனால் அதனை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் மூடப்பட்டது.தற்பொழுது தடுப்பூசி நடைமுறைக்கு வந்தவுடன் பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்பட்டது.அந்தவகையில் செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது.
பெற்றோர்கள் ஆலோசனை கேட்டறிந்த பிறகு நவம்பர் மாதம் முதல் ,ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.அதிலும் சிறு கல்வி மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் பள்ளி திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் குறித்த செய்தி சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டது. அவற்றை விளக்கும் விதமாக இன்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். இன்று அவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி என்ற கிராமத்தில் மக்களின் குறைகளை கேட்டறியும் விதத்தில் மனுக்களை வாங்கினார்.
அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது,ஆசிரியர் கலந்தாய்வு குறித்த முடிவுகள் முதலமைச்சரிடம் ஆலோசனை செய்த பிறகு வார இறுதிக்குள் கலந்தாய்வு தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.சமீபகாலமாக மாணவர்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் அதிகளவு நடக்கிறது.அந்தவகையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தும் விதமாக இம்மாதம் 19ஆம் தேதி சென்னையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றை நடத்த போவதாக தெரிவித்தார்.மாணவர்களுக்கு பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படும் என்று கூறினார்.மேலும் சிறப்பு வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும் ஒன்றுதான்.
அதுமட்டுமின்றி செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதால் முடிக்க வேண்டிய பாடங்கள் அதிகளவு உள்ளது. மேலும் உயர்கல்வி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நெருங்கி வருகிறது. அதற்குள் பாடங்கள் முடித்து அவர்கள் கற்பிக்கும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம். இதனால் சிறப்பு வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு வகுப்புகள் நடைபெறுவது குறித்து செய்தி ஏன் பரபரப்பாக பேசப்பட்டது என்று தெரியவில்லை எனக் கூறினார். மேலும் நாளடைவில் சிறப்பு வகுப்புகள் படிப்படியாக தகற்றப்படும் என்று தெரிவித்தார்.