அன்புமணியின் ஆமை வேக தேர்தல் பிரச்சாரம்: கலக்கத்தில் தொண்டர்கள்!
2021 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அனைத்து கட்சி தலைவர்களும் சுறுசுறுப்பாக தேர்தல் வேலைகளை செய்து கொண்டு வருகிறார்கள் . அதாவது ஆளும் மற்றும் ஆண்ட பெரிய கட்சிகளான திமுக அதிமுக கட்சிகள் முதல் சிறிய கட்சிகளான மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் தங்களது பிரச்சாரத்தை துவங்கி சுறுசுறுப்பாக செய்து கொண்டு வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக மக்கள் நீதி மையம் கமல்ஹாசன் தனது முதல் கட்ட பிரச்சாரம் மற்றும் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை முடித்து விட்டு அடுத்த கட்ட பிரசாரத்திற்காக தயாராகி வருகிறார்.
2016ஆம் ஆண்டு தேர்தலின்போது ஓராண்டுக்கு முன்பே தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி மாற்றம் முன்னேற்றம் அன்புமணி மின்னல் வேகத்தில் சென்ற அதன் விளைவாகத்தான் தமிழகத்தில் தனித்து நின்று 6 சதவீதம் வாக்குகளை பாமகவால் பெற முடிந்தது.
ஆனால் இப்பொழுதோ பாமகவின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுவரை தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கவில்லை. அவ்வப்போது இணையதளத்தில் தோன்றி இட ஒதுக்கீடு போராட்டத்தைப் பற்றி மட்டுமே பேசி வருகிறார்.
2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனோவினால் உலகம் முழுவதும் பொது முடக்கம் போடப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பிறகு கொரோனோ நோய் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்ததால் லாக் டவுனில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள்.
ஆனால் பாமகவின் அன்புமணி மட்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமல் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டே வருகிறார். அதாவது தேர்தலுக்காக எந்த பிரச்சாரமும் செய்ய வெளியே வராமல் வீட்டில் அமர்ந்தபடியே வாரத்திற்கு ஒரு முறை ZOOM மீட்டிங்கில் மட்டும் சந்தித்து பேசி வருகிறார். அன்புமணியின் இந்த ஆமை வேக பிரச்சாரத்தால் பாமக நிர்வாகிகள் மட்டுமல்லாது பாமகவின் தொண்டர்களை சோர்வடைய செய்துள்ளது.
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை பல்வேறு போராட்டங்களை பாமகவும் வன்னியர் சங்கமும் சேர்ந்து நடத்தி வரும் வேளையிலும் கூட அன்புமணி அவர்கள் கலந்து டிசம்பர் 1ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஒரே ஒரு போராட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டார்.
கட்சியின் முக்கிய மற்றும் இளம் தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸ் எந்தவித போராட்டத்திற்கும் வராமல் நிர்வாகிகள் மட்டுமே வருவதால் தொண்டர்களிடையே ஆரவாரம் சற்று குறைந்தே காணப்படுகிறது. அன்புமணியின் இந்த ஆமை வேக செயல்பாட்டினால் பாமகவுக்கு விழும் ஓட்டு சதவீதம் மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது..
பாமகவில் அன்புமணியை விட வயதில் முதிர்ந்த முக்கிய தலைவர்களான ஜி.கே.மணி மற்றும் தற்போதைய வன்னியர் சங்க தலைவர் புதா.அருள் மொழி கூட ஊர் ஊராக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.