விவசாயிகளை கடவுளாக நினைக்கிறேன்; நீர் மேலாண்மைக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்!! அன்புமணி பேச்சு!

0
147

விவசாயிகளை கடவுளாக நினைக்கிறேன்; நீர் மேலாண்மைக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்!! அன்புமணி பேச்சு!

அம்பத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு முத்துவிழா பாராட்டு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணி பேசுகையில்,

தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதே எங்கள் கொள்கை, அடித்தட்டு மக்கள் முன்னேற பாமக பாடுபட்டு வருவதாக கூறினார். மத்திய அமைச்சராக இருந்தபோது இந்தியா முழுக்க 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையை கொண்டு வந்ததை குறிப்பிட்டு பேசினார். தமிழகத்தில் ஆரம்பிக்கும் எந்த கட்சிக்கும் ஆட்சியில் அமர்வதே நோக்கமாக இருக்கும், பாமகவும் ஆட்சியில் அமர வேண்டும் என பேசினார்.

தமிழகத்திற்கு தேவையான தரமான, அறிவுசார்ந்த கல்வியை இலவசமாக வழங்குவோம். விவசாயிகளை கடவுளாக பார்க்கிறேன் தற்போதைய சூழலில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை என்றும், தமிழக பட்ஜெட்டில் நீர் மேலாண்மைக்காக ஒரு லட்சம் கோடி வழங்கினால், தமிழக விவசாயிகளின் வாழ்வாதார நிலை உயரும் என்று கூறினார்.

இதனையடுத்து, விவசாயத்திற்கு முக்கிய தேவையான கோதாவரி மற்றும் காவிரி ஆறுகளை இணைக்கும் திட்டத்தை தொடர்ந்து பாமக வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று கூறியதைப் போலவே, 500 டாஸ்மாக் கடைகளை முதல்வர் எடப்பாடி அரசு மூடியது. நீதிமன்ற சட்ட போராட்டத்தின் மூலம் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மூன்றாயிரம் மதுபான கடைகள் மூடினோம், சமீபத்தில் எங்களின் முக்கிய கோரிக்கையை ஏற்று 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு செய்தது மட்டுமல்லாமல், அதனை சட்ட மசோதாவாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பேசினார். தமிழக உரிமைக்காக போராடும் பாமகவை மக்கள் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று கூறினார். இக்கூட்டத்தில் பாமக வழக்கறிஞர் கே.பாலு, முன்னாள் மத்திய இரயில்வே துறை அமைச்சர் ஏகே மூர்த்தி ஆகியோருடன் அம்பத்தூர் பகுதி பாமக கட்சியினர் கலந்து கொண்டனர்.

Previous articleகாலையில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர்:மதியத்துக்குள் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்!
Next articleமோர்கன் வானவேடிக்கை! போட்டியையும் தொடரையும் வென்ற இங்கிலாந்து!