வேலூர் மாவட்டம், ஆந்திர மாநில எல்லை பகுதியான சித்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள அணை நிரம்பி வழிகிறது.
தமிழ்நாடு, ஆந்திர எல்லைப்பகுதியான சித்தூர் பகுதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சித்தூர் அருகே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிந்தது.நேற்று அதிகாலை முதலே திருவலம் அருகே பொண்ணையாற்றின் பகுதியில் இருக்கையை தொட்டபடி தண்ணீர் இருந்தது. இதனால் 10 ஆயிரம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் அதிகாரிகள் தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தினர். இதனால் பொன்னை ஆற்று பகுதியில் வரும் நீர் வரத்து குறைந்தள்ளது. இதற்கு கலவகுண்ட மற்றும் அதன் சுற்றியுள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சித்தூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து பொன்னை பாசன விவசாயிகள் கூறுகையில், தமிழக முதல்வர் தண்ணீர் திறப்பது குறித்து ஆந்திர மாநில முதல்வர்களுடன் பேசி கலவகுண்டா அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.