ஆண்ட்ரியா கமிட் ஆயிட்டாங்க!! இனி அவங்களுக்கு ரெஸ்டே கிடையாது!!

0
129
Andrea commit ayittanga !! They have no rest anymore !!
Andrea commit ayittanga !! They have no rest anymore !!

ஆண்ட்ரியா கமிட் ஆயிட்டாங்க!! இனி அவங்களுக்கு ரெஸ்டே கிடையாது!!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. பாடகி மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக திரையுலகிற்கு அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் இவரை நடிகையாக உயர்த்திக் கொண்டார். ஆண்ட்ரியா சென்னையிலுள்ள அரக்கோணத்தில் ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

மேலும் ஆண்ட்ரியா தனது 10 வயது முதல் இசை பரிசு யங் இசுடார்சு இசைக்குழுவில் பாடி வருகிறார். தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர்  தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் மீண்டும் ஒரு பட வாய்ப்பு வந்துள்ளது. அது என்னவென்றால் அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா தற்போது படமொன்றில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் அடுத்த மிஷ்கின் இயக்கத்தில் பீசா பாகம்-2 உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். பல முன்னணி நடிகைகள் நடித்த கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் போல இந்த படமும் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என தகவல் வந்துள்ளது. மேலும் இன்னும் சில நாட்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாம். மேலும் இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Previous articleஇன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட முக்கிய பிரச்சனை!இரு அவைகளும் ஒத்திவைப்பு!
Next article10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு!! விரைந்து விண்ணப்பம் செய்யுங்கள்!!