ஆண்ட்ரியாவுக்கு கண்டிப்பாக இது கிடைக்கும்! மிஸ்கின் நம்பிக்கை!

0
132

மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்ததற்காக ஆண்ட்ரியாவுக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று நம்பிக்கை அளித்துள்ளார்.

சித்திரம் பேசுதடி ,அஞ்சாதே ,ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு , சைக்கோ துப்பரிவாலன், என பல்வேறு வெற்றி படங்களை இயக்கியுள்ளார் மிஸ்கின். அவரது பேச்சு எப்பொழுதுமே மற்றவர்களை கவர்ந்திழுக்கும் விதமாக தான் இருக்கும்.

மேலும் அவர் இயக்கிய பிசாசு படம் மிகவும் வெற்றியடைந்ததால், அடுத்தது பிசாசு படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார். இதில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதியும் கௌரவ வேடத்தில் நடிக்கிறார் என்று மிஸ்கின் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைத்து இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் இயக்குனர் மிஸ்கின் டிவிட்டர் ஸ்பேஸ் வாயிலாக நேற்று ரசிகர்களுடன் உரையாடினார். அப்பொழுது அவர் தான் இயக்கிவரும் பிசாசு படத்தின் இரண்டாவது பாகம் குறித்து பலவிதமான சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அப்பொழுது இந்த படத்தில் நடித்த நடிகை ஆண்ட்ரியா மிகவும் சிறப்பாக நடித்து உள்ளதாகவும் கண்டிப்பாக அவருக்கு தேசிய விருது இப்படத்திற்காக கிடைக்கும் எனவும் இயக்குனர் மிஷ்கின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் ரசிகர்கள், தளபதி விஜய்யை வைத்து இயக்கினால் அவருக்கு என்ன விதமான கதாபாத்திரம் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு அதிரடியான பதிலையும் தெரிவித்துள்ளார். அதற்கு மிஸ்கின் சொன்ன பதில், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் விஜய் அவர்களுக்கு நன்றாக இருக்கும் என்று கூறி ரசிகர்களை மகிழ்ச்சியில் திண்டாட வைத்திருக்கிறார்.

Previous articleபிலிப்பைன்ஸ் நாட்டு மக்களை “கைது செய்து தடுப்பூசி போடுவேன்”! என அதிபர் மிரட்டல்!
Next articleகுழந்தைகளுக்கு தடுப்பூசி போட பரிந்துரை செய்யும் H/L 1 சுகாதார நிபுணர்கள்!