மனித உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் பொழுது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.இந்த ஹீமோகுளோபின் இரத்த சிவப்பணுக்களில் காணப்படுகிறது.நமது உள் உடலில் உள்ள ஆக்சிஜனை பிரித்து மற்ற உறுப்புகளுக்கு கொடுக்கும் முக்கிய பணியை இந்த ஹீமோகுளோபின் செய்கிறது.
ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு: 14-18 கி/டெ.லி
பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு: 12-16 கி/டெ.லி
இந்த நிர்ணயிக்கப்பட்ட அளவு குறையும் பொழுது உடலில் அனீமியா அதாவது இரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது.ஆண்களைவிட பெண்களுக்கு தான் இரத்த சோகை பாதிப்பு அதிகளவு ஏற்படுகிறது.
இரத்த சோகைக்கான காரணங்கள்:-
1)உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுதல்
2)சிறுநீரக நோய் பாதிப்பு
3)வைட்டமின் பி 12 குறைபாடு
4)நோய் தொற்று
இரத்த சோகைக்கான அறிகுறிகள்:-
1)அதீத உடல் சோர்வு
உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் பொழுது உடல் சோர்வை சந்திக்க கூடும்.இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதை தான் இரும்புச்சத்து குறைபாடு என்று அழைக்கின்றோம்.
2)தோல் நிறத்தில் மாற்றம்
இரத்த சோகை பாதிப்பு ஏற்பட்டால் உடலில் தோல் நிறம் வெளிறிய தன்மையை அடையும். தோலின் மேற்பரப்பில் சிவப்பு இரத்தம் குறைவாக பாய்வதால் தான் தோல் வெளிறிய தன்மையை அடைகிறது.இது இரத்த சோகைக்கான அறிகுறியாக இருக்கலாம்.
3)தீராத தலைவலி
இரத்த சோகை பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இருக்கும் பொதுவான அறிகுறி தலைவலி பாதிப்பு தான்.உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் பொழுது தலைவலி உண்டாகிறது.
4)சீரற்ற இதயத் துடிப்பு
இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் இதயத்திற்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது.அப்படி இருக்கையில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் இதயத்திற்க்கு ஆக்சிஜன் எடுத்து செல்லும் பணி கடுமையாகும்.இதனால் இதய துடிப்பில் மாற்றம் ஏற்படும்.
5)நரம்பு பிரச்சனை
உடலில் வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்பட்டால் நரம்பு பாதிப்பு உண்டாகும்.வைட்டமின் பி 12 குறைபாடு இரத்த சோகையை உணர்த்துகிறது.நரம்பு பாதிப்பு ஏற்பட்டால் கை,கால்களில் கூச்ச உணர்வு ஏற்படும்.
6)மூச்சு திணறல்
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும் பொழுது மூச்சு திணறல் ஏற்படுகிறது.இதனால் சிறிது தூரம் நடந்தாலே மூச்சு திணறல் பிரச்சனையை அனுபவிக்க நேரிடும்.
7)நாக்கு புண்
இரத்த சோகை பாதிப்பு இருந்தால் நாவில் வீக்கம் அல்லது கொப்பளங்கள் தோன்றும்.வாயின் மூலைகளில் புண்கள் இருந்தால் அது இரத்த சோகைக்கான அறிகுறியாக இருக்கலாம்.எனவே இந்த அறிகுறி இருப்பவர்கள் வைட்டமின் பி 12,இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது நல்லது.