அனீமியா: இரத்த சோகை இருப்பவர்கள் இந்த இலையை அரைத்து சப்பிடுங்கள்!! 10 நாளில் பலன் கிடைக்கும்!!
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் இரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது.இரத்தத்தில் இருக்கின்ற சிவப்பணுக்கள் உடலில் மற்ற உறுப்புகளுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது.
அது மட்டுமின்றி நோய் தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது.இரத்த சோகை ஏற்பட்டால் அடிக்கடி மயக்கம் ஏற்படும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பலவீனமாக காணப்படுவீர்கள்.
இரத்த சோகை அறிகுறிகள்:
1)மூச்சு திணறல்
2)தலைவலி
3)மயக்கம்
4)உடல் சோர்வு
5)முடி உதிர்தல்
6)ஒழுங்கற்ற இதயத்துடிப்பு
7)கல் கால் குளிர்ச்சி
இரத்த சோகை பாதிப்பு எளிதில் குணமாக இந்த வைத்தியங்களை செய்து வாருங்கள்.
தீர்வு 01:
தேவைப்படும் பொருட்கள்:
*முருங்கை இலை
*தேன்
ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலையை நீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் இந்த சாற்றில் சிறிது தேன் சேர்த்து அருந்தவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இரத்த சோகை பாதிப்பு குணமாகும்.
முருங்கை இலையில் உள்ள இரும்புச்சத்து,கால்சியம்,மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இரத்த சோகை பாதிப்பை குணமாக்க உதவுகிறது.
தீர்வு 02:
*பீன்ஸ்
*உப்பு
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் 4 அல்லது பீன்ஸை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.இதை 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து பருகினால் இரத்த சோகை பாதிப்பு குணமாகும்.