தமிழகத்தில் இருக்கக்கூடிய பள்ளிக்கல்விகளுக்கு முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறைகள் துவங்கி விட்டது. இவர்களுக்கான பள்ளி திறப்பு தேதி கோடை வெயிலின் தாக்கம் பொருத்த தள்ளி வைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
பள்ளிக்கல்வித்துறை தரப்பில் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் கோடை விடுமுறை விடுவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கிறது. அதன்படி, 15 நாட்கள் கோடை விடுமுறை மற்றும் அதற்கான சம்பளம் வழங்கப்பட இருப்பதாகவும் இந்த முடிவானது 2022 ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்டு வருவதாகவும் வெப்ப அலை காரணமாக 15 நாட்கள் விடுமுறை விடப்பட இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 11 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய இந்த போரை விடுமுறையானது 2022 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருவதாகவும் இதோடு கூடவே அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் உள்ளிட்டவைகளும் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது அங்கன்வாடி ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது.