இடுகாட்டில் அங்கன்வாடியா! குழந்தைகளின் நிலை என்ன?
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் உட்பட்ட ஐயப்பன்தாங்கல் ஊராட்சி சென்னைக்கு மிக அருகாமையில் முதல் நிலை ஊராட்சியாக உள்ளது.இந்த ஊர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாக விளங்குகிறது.சென்னைக்கு அருகாமையில் உள்ள மாவட்டங்களிலேயே அதிக வருமானம் ஈட்டக்கூடிய முதல் நிலை ஊராட்சியாக ஐயப்பன் தாங்கல் உள்ளது.
இந்த பகுதிகளில் எண்ணற்ற அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களும் ,தொழிற்ச்சாலைகளும் உள்ளன.இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள இடுகாட்டு பக்கம் பெரியவர்களே செல்ல அச்சப்படுகின்றனர்.அங்கு ஆறு மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் இருக்காது.
இந்நிலையில் அந்த பகுதியில் குழந்தைகளுக்கு அங்கன்வாடி பள்ளி அமைகின்றனர் இது வருந்த தக்க செயலாகும்.இதனை ஊராட்சி மன்ற தலைவர் கூட கண்டுக்கொள்ள வில்லை எனவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.இடுகாட்டில் அங்கன்வாடி அமைத்தால் ஒரு குழந்தைகள் கூட வரமாட்டர்கள் என்பது தெரியாதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் அதேபோல் நான்காவது வார்டு பொன்னியம்மன் கோவில் தெருவில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உள்ள சுடுகாடு மற்றும் இடுகாடு ஆகிய இரண்டையும் இடித்து தள்ளி அதன் மீது சுமார் 15,000 டன் குப்பைகளை கொட்டியுள்ளனர் .அதனால் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது.