அனிமேட்டட் அவதார் அம்சம்!! அசத்தலான வாட்ஸ் ஆப் நியூ அப்டேட்!! 

Photo of author

By Jeevitha

அனிமேட்டட் அவதார் அம்சம்!! அசத்தலான வாட்ஸ் ஆப் நியூ அப்டேட்!! 

Jeevitha

Animated Avatar Feature!! Amazing WhatsApp New Update!!

அனிமேட்டட் அவதார் அம்சம்!! அசத்தலான வாட்ஸ் ஆப் நியூ அப்டேட்!!

தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம்  புதிய அப்டேட்டை  அறிவித்துள்ளது. இந்த வாட்ஸ் ஆப்பை உலக முழுவதும் 200  கோடிக்கு அதிகமான பேர் உபயோக்கித்து வருகிறார்கள். அவர்களின் வசதிகேற்ப அடிக்கடி வாட்ஸ் ஆப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது.

அதனை தொடர்ந்து மெட்டா நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு நாளுக்கு நாள் சிறப்பிக்கும் நோக்கத்தில் புதிய அப்டேட்களை அடிக்கடி அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

சில நாட்கள் முன்பு வாடிக்கையாளர்களுக்கு வசதியாக தங்கள் பழைய போனில் இருக்கும் அனைத்து தகவல்களையும் புதிய போனிற்கு எளிதாக மாற்றி கொள்ளும் வசதியை அறிவித்திருந்தது.

அதன் பின் மோசடி நடக்காமல் தடுக்க வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்டை அறிவித்திருந்தது. அந்த புதிய வசதி silence unknows callers ஆகும். இந்த வசதி மூலம் தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வராது என்று அறிவித்திருந்தது. அதனையடுத்து ஏற்கனவே சில வாரங்கள் முன்பு ஒரு வாட்ஸ் ஆப் கணக்கை 4 டிவைஸ்களில் லாகின் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்திருந்தது.

அதனை தொடர்ந்து whatsapp web மூலம் விடோஸியில் லாகின் செய்ய க்யூ ஆர் கோட் ஸ்கேன் செய்யமால் மொபைல் நம்பரை பதிவு செய்து எட்டு இலக்கு otp எண்ணை பதிவு செய்ததுடன் whatsapp லாகின் செய்து கொள்ள முடியும். இதனால் வாட்ஸ் அப் கணக்கை எளிதில் லாகின் செய்து கொள்ள முடியும் என்று அறிவித்திருந்தது.

தற்போது அந்த நிறுவனம் அனிமேட்டட் அவதார் அம்சத்தை மேம்படுத்தும் பணியை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் பயனர்கள் தங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டே அவதார்களை தயார் செய்து கொள்ள முடியும். மேலும் link with phone number எண்ட ஆப்ஷன் ஒன்று கிடைக்கும் என்றும் அதனை எளிதாக பயன்ப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.