பொது அதிகார பத்திரப்பதிவுக்கு 1% கட்டணம்!! இந்த உயர்வை திரும்ப பெற கோரிக்கை!!

0
32
1% Fee for Public Authority Deed Registration!! Request to withdraw this raise!!
1% Fee for Public Authority Deed Registration!! Request to withdraw this raise!!

பொது அதிகார பத்திரப்பதிவுக்கு 1% கட்டணம்!! இந்த உயர்வை திரும்ப பெற கோரிக்கை!!

தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறையின் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டு கடந்த 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதாவது, ரசீது ஆவணத்திற்கான பதிவு கட்டணம் ரூபாய் இருபதிலிருந்து ரூபாய் இருநூறு ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மேலும், குடும்ப நபர்களுக்கு இடையேயான பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான கட்டணம் ரூபாய் 4,000 முதல் ரூபாய் 10,000 எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வுக்கான கட்டணம் ரூபாய் 25,000 முதல் ரூபாய் 40,000 வரையிலும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

 மேலும், தனியாக வீட்டை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூபாய் 200 லிருந்து ரூபாய் 1000 ஆகவும், குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் பொது அதிகார ஆவணங்களுக்கான கட்டணம் ரூபாய் 10,000 என்று இருப்பதை சொத்தினுடைய சந்தை மதிப்பிற்கு ஒரு சதவிகிதம் ஆகவும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

 இந்த கட்டண உயர்வு புதிய வீடுகளின் கட்டுமானத்தையும் மிகவும் பாதிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பத்திரப்பதிவுத்துறையின் சேவை கட்டணம் உயர்ந்ததை அடுத்து மனைகளின் விலை மூன்று முதல் ஐந்து சதவிகிதம் வரை உயரும் என்று கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் கூறி வருகின்றனர்.

அதாவது, ஒரு வீடு கட்ட முப்பது லட்சம் செலவாகும் இடத்தில் கூடுதலாக ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை சேர்த்து செலவாகும் என்று கூறப்படுகிறது.

இந்த கட்டண உயர்வு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் புது வீடு வாங்கி அதற்கு செட்டில்மென்ட் பத்திரத்தை பதிவு செய்ய பத்து ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும்.

இது நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும் என்பதனால் இந்த கட்டண உயர்வை ரத்து செய்ய தினமும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றனர்.

இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு, பொது அதிகார பதிவுக்கு தற்போது 1 சதவிகிதம் கட்டணம் செலுத்த கூடிய நிலை வந்துள்ளது.

அதாவது நிலத்திற்கு மட்டுமே மதிப்பு இருக்கின்ற நிலைமையில், கட்டிடத்திற்கும் எவ்வாறு மதிப்பை கணக்கிடுவது என்று குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.

எனவே, இந்த கட்டணம் உயர்வை திரும்ப பெறுவதற்கு அரசிற்கு வலியுறுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். இருபது ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் இந்த பத்திரப்பதிவுத்துறை சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் அரசிற்கு வருவாய் அதிகரிக்கும். ஆனால் மக்களுக்கு இது சிரமத்தை உண்டாக்கும் என்பதனால் கட்டணத்தை குறைக்க அனைவரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

author avatar
CineDesk