நமது உடல் சூடு தணிய பெருஞ்சீரகத்தில் டீ செய்து குடிக்கலாம்.இது தவிர பெருஞ்சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தேவையான பொருட்கள்:-
1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த பெருஞ்சீரக பானம் அரை கப் அளவிற்கு சுண்டி வந்ததும் வடிகட்டி கொள்ள வேண்டும்.இந்த பானத்தை பருகினால் உடல் சூடு முழுமையாக குறையும்.
பெருஞ்சீரகத்தின் ஆரோக்கிய நன்மைகள்:-
1.பெருஞ்சீரகத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த பெருஞ்சீரகத்தில் தேநீர் செய்து பருகினால் கண் பார்வை திறன் மேம்படும்.கண் தொடர்பான பாதிப்பு இருப்பவர்கள் பெருஞ்சீரக தேநீர் செய்து பருகலாம்.
2.உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் பெருஞ்சீரகத்தில் டீ செய்து பருகலாம்.இரத்த கொதிப்பு பாதிப்பு இருப்பவர்கள் சோம்பு பானம் செய்து பருகலாம்.
3.இரத்த சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுப்பட பெருஞ்சீரக பானம் செய்து பருகலாம்.பெருஞ்சீராகத்தில் வைட்டமின் சி சத்து அதிகமாக நிறைந்திருப்பதால் சருமம் தொடர்பான பாதிப்புகளில் இருந்து மீள சோம்பு பானம் செய்து பருகலாம்.
4.வாய் துர்நாற்றம் நீங்க பெருஞ்சீரக பானம் செய்து பருகலாம்.பெருஞ்சீரகத்தில் இருக்கின்ற நார்ச்சத்து செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் பெருஞ்சீரகத்தில் பானம் செய்து பருகலாம்.
5.தினமும் பெருஞ்சீரகம் சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும்.
6.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெருஞ்சீரக பானம் செய்து பருகலாம்.மூட்டு வலி,கை
கால் வலி போன்றவை குணமாக பெருஞ்சீரக பானம் செய்து பருகலாம்.