நாம் உணவில் பல வகை மசாலா பொருட்கள் சேர்த்துக் கொள்கின்றோம்.நாம் பயன்படுத்தும் மிளகு,சீரகம்,சோம்பு,பட்டை,இலவங்கம் என்று அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக உள்ளது.ஒவ்வொரு மசாலாவும் தனி சுவை,மணம்,மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.
இதில் சோம்பு அதாவது பெருஞ்சீரகம் ஏகப்பட்ட நன்மைகளை கொண்டிருக்கிறது.பெருஞ்சீரகத்தில் வயிறு கோளாறுகளை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கின்றது.பெருஞ்சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து பானமாக குடித்து வந்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.
பெருஞ்சீரகத்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
1)செரிமானப் பிரச்சனை நீங்க பெருஞ்சீரகத் தண்ணீர் குடிக்கலாம்.உணவு உட்கொண்ட பிறகு 15 நிமிடங்கள் கழித்து கால் தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிட்டால் வயிறு உப்புசமாகாமல் இருக்கும்.
2)உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க தினமும் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை சாப்பிடலாம்.கண் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள சோம்பு பானம் குடிக்கலாம்.
3)மாதவிடாய் கால பாதிப்புகள் குணமாக பெருஞ்சீரகத்தை சாப்பிடலாம்.கேன்சர் செல்கள் அழிய சோம்பு சாப்பிடலாம்.
4)உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள சோம்பு பானம் பருகலாம்.
5)தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாக சோம்பு தண்ணீர் பருகலாம்.இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய சோம்பு தேநீர் செய்து பருகலாம்.
6)கருப்பையில் இருக்கின்ற அழுக்கு கழிவுகள் நீங்கி சீக்கிரம் கருவுற தினமும் ஒரு கிளாஸ் பெருஞ்சீரக பானம் குடிக்க வேண்டும்.