ஆண்டவரையே குறை கூறிய அனிதா! பதிலடி கொடுத்த சனம் ஷெட்டி!

Photo of author

By Kowsalya

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் சார் ஒரு சார்பாக பேசுவதாக கமல்ஹாசன் மீது அனிதா சம்பத் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சம்யுக்தா கூறிய ஐடியாலஜி விஷயமாக ஏற்கனவே பேசி முடித்த நிலையில் மறுபடியும் அதையே பேச ஆரம்பித்துள்ளார் அனிதா.

அதற்கு கமலஹாசன் இதைப் பற்றி இரண்டு நிமிடம் முன்னர் தான் என்னிடம் சொன்னீர்கள். எனக்கு புரிந்துவிட்டது. வேண்டுமென்றால் தனியாக அழைத்து அவரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று பட்டென்று சொல்லி விட்டார்.

கமலஹாசன் அதை கூறிய பொழுது சட்டென்று அனிதாவின் முகம் மாறிவிட்டது. அப்போதே தனது முக பாவனைகளை மாற்றிக் கொண்டார். இடைவெளியின் போது சனம் ஷெட்டியிடம் கமல் சார் ஒரு சைடாக பேசுகிறார் என்று கமல் மீது குற்றச்சாட்டை அதிரடியாக வைத்துள்ளார்.

கமல் சார் என்னைப் பேசவே விடவில்லை. ஆரி சொல்வதை தான் கேட்கிறார். ஆரி சொன்னால் சிரிக்கிறார் என்று கமல் சாரின் மீது பயங்கரமான குற்றச்சாட்டுகளை சொல்லிக்கொண்டே இருந்தார்.

சனம் ஷெட்டியிடம் இந்த குற்றச்சாட்டுகளை அவர் வைத்த பொழுது சனம் செட்டி, இல்லை அனிதா, உனக்கும் தாத்தாவுக்கும் நடந்த விவகாரத்தில் கமல் சார் உனக்குத்தான் சப்போர்ட் செய்தார். சுமங்கலி பிரச்சினையிலும் உனக்கு தான் அவர் சப்போர்ட் செய்தார். அதேபோல் உன் மேல் வேறு ஏதாவது புகார் வந்திருக்கலாம். அதனால் அவர் கடுமையாக நடந்து இருக்கலாமே தவிர எந்த ஒரு பெரிய குற்றமும் நீ செய்யவில்லை என்று அனிதாவுக்கு ஆறுதல் கூறினார்.

ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் இல்லை டா என்று கூறி தன் விஷயம் மட்டும் நியாயம் என்ற மாதிரி பேசிக் கொண்டிருந்தார் அனிதா.

இனி சனம் ஷெட்டி எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்று பதிலடி கொடுத்தவாறு விலகிவிட்டார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ஆண்டவர் மீதே குற்றம் சொல்கிறாயா? நல்ல மனநல மருத்துவரை சென்று பாரு அனிதா என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.