இன்று பிறந்தநாளை கொண்டாடும் அஞ்சலி! இவங்கள பாத்தா அவ்வளவு வயசு மாதிரி தெரியலையே?

Photo of author

By Kowsalya

இன்று பிறந்தநாளை கொண்டாடும் அஞ்சலி! இவங்கள பாத்தா அவ்வளவு வயசு மாதிரி தெரியலையே?

Kowsalya

இன்று நடிகை அஞ்சலி தனது 35வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடினார். அவரது பிறந்த நாளை ஒட்டி மூன்று கேக்குகள் வெட்டி புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது ரசிகர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இவருக்கு இப்பொழுது 35 வயது. ஆனால் பார்த்தால் சின்ன பொண்ணு மாதிரி தான் இருக்காங்க. 35 வயதில் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கொண்டாடி அவரது புகைப்படத்தை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்தியாவின் நான்கு மொழிகளிலும் நடித்துள்ளார் நிறைய முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகவும் நடித்துள்ளார். நன்றாக கழுகு மொழுக்கென்று இருந்த அஞ்சலி சமீபத்தில் மிகவும் உடல் எடை குறைந்து இருந்தார். அவர் சமீபத்தில் நடித்த சிந்துபாத் திரைப்படத்தில் நாம் பழைய அங்காடித்தெரு அஞ்சலியை பார்க்க முடிந்தது.

தனது 35வது பிறந்தநாளை கேக் வெட்டி புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அது ட்விட்டர் மட்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படத்தில் யாருமில்லை தனது நாய்க்கு மட்டும் கேக் வெட்டும் புகைப்படத்தை மட்டும் ஷேர் செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அவரது பிறந்த நாள் புகைப்படங்களை வெளியிட்டு அவர் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

அதில் நடிகை அஞ்சலி, உங்களது “ஒவ்வொரு வருடமும் இருந்து வரும் பாசம் மற்றும் நம்பிக்கைக்கு நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள். இந்த கொரோனா காலத்தில் கூட நீங்கள் உங்களுடைய பதிவுகள் மற்றும் வாழ்த்துக்கள் என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது. எப்பொழுதும் நன்றி உள்ளவளாக இருப்பேன்” என்று கூறியுள்ளார்.