சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஆன்லைன் மூலம் கேம்பஸ் இன்டர்வியூ தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் அதிவேகத்தில் பரவும் கொரோனா தொற்றால் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பெற்றோர்கள் அனைவரும் மிகுந்த கவலையில் உள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ நடைபெறும். ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக தடைப்பட்டது. இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான கேம்பஸ் இன்டர்வியூ தற்போது ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கட்டவியல் வடிவமைப்பு கல்வி நிலையம் ஆகியவற்றில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான கேம்பஸ் இன்டர்வியூ தற்போது ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளனர்.
முதல் கட்ட நேர்காணல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணலில் கலந்து கொள்வதற்காக 3,300 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த கேம்பஸ் இன்டர்வியூயில் 25 வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. அவை அனைத்தும் ஆண்டுக்கு 12 லட்சம் முதல் 28 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும் பணிகளை மாணவர்களுக்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.