உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்திரவு!

0
71

உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்திரவு

கொரோனா பரவலால் பள்ளித் தேர்வுகளை ரத்து செய்தது போன்றே கல்லூரி தேர்வுகளும்,இறுதி ஆண்டை தவிர,மற்ற எல்லா மாணவர்களும் தேர்ச்சி என்று உயர்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது.இன்டர்நல் தேர்வு மதிப்பெண் அடிப்படையாக வைத்து செமஸ்டர் தேர்வுகளின் மதிப்பெண்களை வழங்குமாறு கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகளானது கடந்த வாரம் வெளியானது. இதில் பல மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்நிலையில் இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்களில் விசாரித்தபோது,தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு,தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்றும்,அவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தினால் மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் கூறியது.

மேலும் அண்ணா பல்கலைக் கழக சார்பில் தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள்,தேர்வு கட்டணம் செலுத்த வேண்டுமென்னும், 30 -ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள், அபராதத்துடன் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும்,தேர்வு கட்டணம் செலுத்த தவறும் மாணவர்களுக்கு செப்டம்பர் ஏழாம் தேதி முதல் அவர்களின் பெயர்கள் நீக்கப்படுமென்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக,
மாணவர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கினை நீதிபதிகள் விசாரித்தபோது அண்ணா பல்கலைகழக சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்,தேர்வு கட்டணம் செலுத்தாமல் தேர்வு முடிவுகள் வெளியிட முடியாது என்று கூறினார்.இதற்கு தேர்வு கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் உடனடியாக அவர்களது தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டுமென்றும்,தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைப்பதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியது. மேலும் தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு உடனடியாக தேர்வு முடிவுகளை
வெளியிடும்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டு இந்த வழக்கினை வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது
உயர்நீதிமன்றம்.

author avatar
Pavithra