தொடங்கியது வேட்பு மனுவில் மீதான பரிசீலனை! முக்கிய கட்சி வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு?

Photo of author

By Sakthi

சென்ற மாதம் தமிழ்நாடு கேரளா புதுச்சேரி அசாம் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. வேட்புமனு தாக்கல் வேட்பாளர் நேர்காணல் பொதுக்கூட்டம் பிரச்சாரம் என்று பல்வேறு நிலைகளில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருக்கின்றன.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இருபெரும் ஆளுமைகள் தமிழக அரசியலில் இல்லாத ஒரு நிலையில், அவர்கள் இருவரும் இல்லாமல் முதல் முறையாக தமிழ்நாடு இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. அந்த விதத்தில் இரண்டு கட்சிகளுக்குமே எதிர்வரும் தேர்தல் மிக முக்கியமாக கருதப்படுவதால் தெரிவிக்கப்படுகிறது. அதோடு இரண்டு கட்சிகளுமே மிகத்தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறார்கள்.

அந்தவிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் ஆதரவை பெற்று அதோடு மக்களுடைய குறைகளை நேரில் சென்று திருத்தி வைத்தும் வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.அதேபோல எதிர்க்கட்சியான அதிமுக கடந்த பத்து வருட காலமாக ஆட்சியில் இல்லாத காரணத்தால், எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்று மிகத் தீவிரமாக செயலாற்றி வருகிறது. ஆகவே கடந்த பத்து வருட காலமாக அதிமுக செய்த ஊழல்கள் தவறுகள் என்று எல்லாவற்றையும் சுட்டிக்காட்டி திமுக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

மறுபுறமோ அதிமுக கடந்த பத்தாண்டு காலமாக அந்த கட்சி செய்த சாதனைகள் திட்டங்கள் என்று எல்லாவற்றையும் எடுத்துரைத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறது.அந்த விதத்தில் தற்சமயம் இந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதல் முறையாக ஸ்டாலினின் ஒரே மகனான உதயநிதி திமுக சார்பாக சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட இருக்கின்றார்.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் அறிவித்தபடி தமிழகம் முழுவதும் வேட்புமனுத்தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று வேட்புமனுத்தாக்கல் முடிவுக்கு வந்தது. ஆகவே இன்று தேர்தல் ஆணையத்தால் வேட்பாளர்களால் வழங்கப்பட்ட வேட்பு மனுவை பரிசீலனை செய்யும் பணி தொடங்கியது.இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

ஆனால் அதிமுக கூட்டணி சார்பாக அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவர் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் குறித்த விவரங்களை அவர் வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை என்று எதிர்க் கட்சியை சார்ந்தவர்கள் புகார் அளித்திருக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.