டோட்டல் க்ளோஸாகும் அண்ணாமலை பதவி.. மேலிடம் எடுத்த அதிரடி நடவடிக்கை!! வானதி-க்கு போகும் அடுத்த வாய்ப்பு!! 

Photo of author

By Rupa

டோட்டல் க்ளோஸாகும் அண்ணாமலை பதவி.. மேலிடம் எடுத்த அதிரடி நடவடிக்கை!! வானதி-க்கு போகும் அடுத்த வாய்ப்பு!! 

Rupa

Annamalai post is a total close.. Action taken by the top!! Next opportunity to go to Vanadi!!

டோட்டல் க்ளோஸாகும் அண்ணாமலை பதவி.. மேலிடம் எடுத்த அதிரடி நடவடிக்கை!! வானதி-க்கு போகும் அடுத்த வாய்ப்பு!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது டெல்லி மேலிடம் பெரும் அதிருப்தியில் உள்ளது.தேர்தல் சமயத்திலேயே மேலிடத்திலிருந்து தேர்தலுக்காக வரவழைக்கப்பட்ட பணம் எதுவும் முறையாக மக்களுக்கு சென்றடையவில்லை என்ற புகாரானது மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு சென்றடைந்தது.இதனையொட்டி இது குறித்த அண்ணாமலையிடம் கேள்வி கேட்ட பொழுது, பாஜக தமிழகத்தில் வெற்றி பெறாததால் அரசியல் செய்ய நிர்வாகிகளிடம் போதுமான பணம் இல்லை என்றும் பல பேர் இதனால் கடனில் அவதிப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேற்கொண்டு மேலிடம் பணம் அனுப்பியதை தொடர்ந்து இதனை தங்களது தேவைக்காக உபயோகித்து விட்டதாக பதிலளித்துள்ளார்.இவரது இந்த பதிலானது மேலிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நாடாளுமன்ற தேர்தல் தான் அண்ணாமலைக்கு கொடுத்த கடைசி வாய்ப்பு இதில் வெற்றி பெறவில்லை என்றால் கட்டாயம் வானதி சீனிவாசன் அடுத்த பாஜக மாநில தலைவராக நியமிக்கப்படுவார் என்று டெல்லி மேலிடம் அச்சுறுத்தியதாக தகவல்கள் வெளிவந்தது.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்து வரும் நிலையில் அண்ணாமலை பெரும் பின்னடைவை தான் சந்தித்துள்ளார்.தற்பொழுது வரை நடைபெற்ற ஒரு தேர்தலில் கூட அண்ணாமலை வெற்றி பெறவில்லை.இவரால் அதிமுக உடனான கூட்டணியும் பறிபோனது. அதுமட்டுமின்றி பல குற்றச்சாட்டுகள் இவர் மீது வைக்கப்படும் பட்சத்தில் தேர்தல் முடிவுகளை அடுத்து மத்தியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ளும் வகையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு  அதில் அண்ணாமலை பதவி குறித்து மாற்றம் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் சுற்று வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.