அண்ணாமலை ஸ்டாலின் ரகசிய உறவு.. அதிமுக-வை வெட்டி விட்டதே இவங்க பிளான் தான்!! வெளியான பகீர் தகவல்!!
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தை கூட பிடிக்காததற்கு அண்ணாமலை தான் காரணம் என்று உட்கட்சியில் இருப்பவர்கள் முதல் பலரும் கூறி வருகின்றனர்.இதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலை, தனித்து நின்றதால் தான் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி அதிமுகவை விட இரண்டாவது இடத்தில் நாம் உள்ளதாகவும் பறைசாற்றி வருகிறார்.
ஆனால் ஒரு எம்பி கூட மேலிடத்திற்கு செல்லவில்லை என்ற ஆதங்கம் அனைத்து நிர்வாகிகளிடமும் உள்ளது.இதுகுறித்து தமிழிசை , கல்யாணராமன் என பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.குறிப்பாக பாஜகவின் சிந்தனையாளர் பிரிவு பார்வையாளரான கல்யாணராமன் தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து அண்ணாமலை மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.
இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளார்.உட்கட்சிக்குள்ளேயே நிர்வாகிகள் குறித்து இப்படி புகார் அளிப்பது தவறு என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அந்த வகையில் நேற்று பாஜக மையக்கூழு கூட்டத்தில் இதுகுறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கல்யாணராமன் மற்றும் திருச்சி சூர்யா உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கம் செய்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
குறிப்பாக கல்யாணராமன் அவர்கள் கட்சியின் நடத்தை விதிகளுக்கு அப்பாற்பட்டு நடந்து கொண்டதாலும், எந்த ஒரு ஆதாரமின்றி நிர்வாகிகள் குறித்து அவதூறு பரப்புதல் உள்ளிட்ட காரணங்கள் கூறி நீக்கம் செய்துள்ளனர்.இந்த அறிக்கையை வெளியிட்டதுடன் கல்யாண ராமன் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டக்கூடிய ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது, திமுகவுடன் மறைமுக தொடர்பில் அண்ணாமலை இருந்து கொண்டே அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக் விட்டார்.இதனை தான் நான் குற்றச்சாட்டாக கூறினேன்.இது குறித்து அண்ணாமலை கீழ் இருக்கும் எந்த ஒரு நிர்வாகிகளாலும் கூட முடிவெடுக்க இயலாது.விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொள்கின்றோம் என்பதை கூட அறியாமல் நிர்வாகிகள் இருப்பது மிகவும் பரிதாபமான நிலை. இது குறித்து மேலிடத்திலும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.