தமிழகத்தை விட்டு கிளம்பும் அண்ணாமலை.. முக்கிய பொறுப்பில் மூத்த நிர்வாகி!! அமித்ஷா தமிழிசை திடீர் சந்திப்பு!!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்த நாளிலிருந்து பாஜகவின் தலைவர்களுக்குள்ளேயே உட்கட்சி மோதல் இருந்து வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் பாஜக டெபாசிட் இழந்ததற்கு முக்கிய காரணம் அண்ணாமலை தான் என பலரும் கூறினர்.அதற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக பாஜக மூத்த தலைவி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் பேட்டியும் அமைந்தது.இதனால் பாஜக கட்சிக்குள் பூகம்பம் கிளம்பும் அளவிற்கு சமூக வலைத்தளத்தில் காரசார விவாதம் தொடர்ந்து அரங்கேறி வந்தது.
இதனை கண்டிக்கும் விதமாக தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்ற பொழுது அமித்ஷா தமிழிசையை மேடையிலேயே கண்டித்த வீடியோவும் வைரலானது.இவ்வாறன விவாதத்திற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அண்ணாமலை உடனடியாக தமிழிசை வீட்டிற்கு சென்று வெள்ளைக் கொடி காட்டினார்.மேற்கொண்டு அனைத்து பிரச்சினைகளும் முடிவடைந்த நிலையில் தமிழிசை சில தினங்களுக்கு முன்பு திடீரென்று டெல்லிக்கு சென்று அமித்ஷா-வை சந்தித்துள்ளார்.
இதனிடையே தமிழக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் சார்ந்து படிப்பதற்காக செல்ல இருக்கிறார்.இவர் வர ஆறு மாத காலம் ஆகும் என்பதால் அதன் வரை கட்சி சம்பந்தப்பட்ட அனைத்து பொறுப்புகளையும் பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் பார்ப்பதாக கூறுகின்றனர்.இவ்வாறு அண்ணாமலை தமிழகத்தை விட்டு கிளம்பும் நிலையில் அமிதஷா-வுடனான தமிழிசை திடீர் சந்திப்பானது பாஜக மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் முக்கிய பொறுப்புகள் இவருக்கு தனியாக வகுத்துக் கொடுக்கப்படும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.