அண்ணாத்த திரைப்படத்தின் அதிரடி அப்டேட்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!!

0
275

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகவுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4-ம் தேதி  தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகி  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து வெளியான அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல் மற்றும் இரண்டாவது டூயட் பாடல்  வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி வெளியான அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அண்ணாத்த திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளது.

இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படத்தின் ‘மருதாணி’ என்று தொடங்கும் மூன்றாவது பாடல் நாளை மாலை 6 மணிக்கு ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பாடலை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்.

 

 

Previous articleவெப் சீரியஸில் நடிக்கவுள்ள பிரபல நடிகை.!! வெளியான தகவல்.!!
Next articleநடிகை கீர்த்தி சுரேஷ்க்கு இன்று பிறந்தநாள்.!!குவியும் திரைபிரபலங்களின் வாழ்த்து.!!