அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு!

Photo of author

By Parthipan K

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு!

Parthipan K

Announcement issued by Anna University! The last date is published for these students to apply to write the exam!

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் 2001-2002 ஆம் கல்வியாண்டுக்கு பிறகு படித்த மாணவர்கள் 3 வது செமஸ்டர் தேர்வில் அரியர் வைத்திருந்தால் தற்போது நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வில் கலந்து கொள்ளலாம் என சிறப்பு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வு கட்டணத்துடன் சேர்த்து 5000 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.இந்த அரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.coe1.annauniv.eduஎன்ற இணையதளப்பக்கத்தில் இன்று முதல் டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் சென்னை லயோலா இன்ஜினீயரிங் கல்லூரி ,விழுப்புரம் இன்ஜினீயரிங் கல்லூரி ,ஆரணி இன்ஜினீயரிங் கல்லூரி ,சேலம் அரசு பொறியியல் கல்லூரி ,கோவை அண்ணா பல்கலைக்கழக கிளை ,ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி ,திருச்சி இன்ஜினீயரிங் கல்லூரி ,மதுரை அண்ணா பல்கலைக்கழக கிளை உள்ளிட்ட மையங்களில் தேர்வுகள் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் இந்த தேர்வு மையங்களில் ஏதேனும் ஒரு தேர்வு மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.