தனியார் பேருந்திற்கு ரூ 25000 அபராதம்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை! 

தனியார் பேருந்திற்கு ரூ 25000 அபராதம்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது. அதனால் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய போதிலும்  பேருந்தில் கூட்ட நெரிசலில் செல்வதற்கு அச்சமடைந்து வந்தனர்.

ஆனால் தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்ய தொடங்கி விட்டனர்.தற்போது போக்குவரத்து விதிகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் முதலில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

மது  அருந்திவிட்டு வாகனம் இயக்க கூடாது.மது அருந்தி விட்டு வாகனத்தில் பின்னால் அமர்ந்து வர கூடாது.அனைத்து பேருந்துக்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்ய கூடாது.அவ்வாறு பயணம் செய்தால் சட்ட நடவடிக்கை இல்லையெனில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திடீரென பேருந்துக்களில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது மகாலட்சுமி என்ற தனியார் பேருந்து அளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்துள்ளது.அந்த பேருந்தில் ஏறி ஆய்வு நடத்திய போது பயணிகள் அதிகம் இருப்பதை கண்ட மாவட்ட ஆட்சியர் ரூ 25,000 அபராதம் விதித்தார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் அரசு பேருந்துக்களிலும் தான் அதிக அளவு பயணிகளை ஏற்றி செல்கின்றனர் அதனை ஏன் நீங்கள் கண்டுக்கொள்ளவில்லை.தனியார் பேருந்துக்களை மட்டும் குறி வைக்கின்றீர்கள் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.