சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த இரண்டு நாட்களுக்கும் வெளுத்து வாங்கும் மழை!
சென்னை வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நேற்று தென்கிழக்கு அதனை ஒட்டி உள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மத்திய கிழக்கு வங்க கடற் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 8 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டது. அதன் பிறகு வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா சந்திவிப் இடையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாளை தமிழ்நாடு ,புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . 25,27 ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கும் வானம் ஓரளவு மேகமும் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலும் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.