ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பு! இந்த வகையான செலவாணி விரைவில் அமலுக்கு வரவுள்ளது!
தற்போது உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.அதனால் பல்வேறு தரப்பில் இருந்து இதனை முறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்.கிரிப்டோகரன்சிகள் தனியாரால் நிர்வகிக்கப்படுகின்றது அதனால் அதனை முறைப்படுத்துவது கடினம்.அதில் பாதுகாப்பின்மை நிலவுகின்றது.இந்நிலையில் மத்திய அரசு பட்ஜெட்டில் ஆர்பிஐ சார்பில் எண்ம செலவாணி வெளியடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ம செலவாணியை வெளியிட ஆர்பிஐ சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
தற்போது அதற்கான கருத்துருவை வெளியிட்டுள்ளது.அதில் தற்போது நாட்டில் நடைமுறையில் இருக்கும் செலவாணிகளுக்குக் கூடுதல் வலுசேர்க்கும் வகையில் எண்ம செலவாணி இருக்கும் எனவும் தற்போதுள்ள செலவாணிகளுக்கு மாற்றாக எண்ம செலவாணி இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.மேலும் குறிப்பிட்ட செயல்பாடுகளில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய எண்ம செலவாணியை சோதனை அடிப்படையில் விரைவில் வெளியிடப்படும்.
அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகளையும் ஆர்பிஐ அவ்வப்போது வெளியிடும்.நிதிக் கொள்கையில் எண்ம செலாவணியானது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை அதனால் சோதனையின் அடிப்படையில் எண்ம செலவாணியின் பயன்பாடு விரிவாக்கப்படும்.எண்ம செலவாணியானது சில்லறை நோக்கிலும் ,மொத்த விலை நோக்கிலும் இரு வகையாக வெளியிடப்படும்.சில்லறை நோக்கில் உள்ள செலவாணி அனைவரும் பயன்படுத்த முடியும்.மொத்த விலை நோக்கில் உள்ள செலவாணி குறிப்பிட்ட நிதி நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
மேலும் உள்நாட்டு தேவைகளுக்கு ஏற்ப எண்ம செலாவாணியானது உருவாக்கப்படும்.இதனையடுத்து உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட எண்ம செலவாணியானது மலிவானதாகவும் அனைவருக்கும் கிடைக்க கூடியதாகவும் உள்ளது.அந்த செலவாணியானது பாதுகாப்பாகவும் ,திறன்மிக்கதாகவும் அமையும்.நாட்டின் பணப்புழக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் எண்ம பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையிலும் இவை செயல்படும் என்பது குறிப்பிடதக்கது.