லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நாளை உரையாற்றுகிறார் அண்ணாமலை! 2000க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் தமிழர்கள் அண்ணாமலையின் பேச்சைக் கேட்க ஆர்வம்!

0
63

தமிழக பாஜகவின் தலைவர் அம்மா மலை கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அமெரிக்காவிற்கு பயணமானார் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்படும் ஆஸ்பென் இன்ஸ்டிடியூட் நிறுவனம் உலக அளவில் வளர்ந்து வரும் 20 தலைவர்களை தேர்ந்தெடுத்து, சர்வதேச தலைவர் பெல்லோ ஷிப் என்ற பயிற்சி வகுப்பை வருடம் தோறும் நடத்தி வருகிறது. இதில் பங்கேற்பதற்காக அண்ணாமலை அமெரிக்கா சென்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒரு வார கால பயிற்சி முடித்துக் கொண்டு சான் பிரான்சிஸ்கோ செல்லும் அண்ணாமலை, நாளை அங்கே நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

இது தொடர்பாக வெளிநாடு பாஜகவின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாவது, அண்ணாமலை பங்கேற்கும் கூட்டத்தில் தனிப்பட்ட அழைப்பை தவிர்த்து வேறு எந்த விளம்பரமும் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும், சமூக ஊடகங்கள் மூலமாக அண்ணாமலை வருகையை அறிந்து கொண்ட அமெரிக்க வாழ் தமிழர்கள், அவருடைய பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

முதலில் 200 பேர் அமரும் அரங்கத்தை ஏற்பாடு செய்தோம். ஆனாலும் அது பற்றாக்குறையாக இருக்கும் என்பதால் 500 பேர் வரையில் அமரும் அரங்கை ஏற்பாடு செய்திருக்கிறோம். இருந்தாலும் இதுவரையில் 2000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளார்கள். நாள் நெருங்க, நெருங்க இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சாம் பிரான்சிஸ்கோ பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கின்ற ஷியாட்டில் நகரத்திற்கு செல்கிறார் அண்ணாமலை.

மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் இந்த பகுதியில் இருக்கின்றன. அமெரிக்க வாழ் தமிழர்களை இங்கும் அண்ணாமலை சந்தித்து உரையாடுகிறார் என்றும் சொல்லப்படுகிறது.