தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கான அகமதிப்பீடு!

0
245
Announcement issued by the Department of Examinations! Self Assessment for Students!
Announcement issued by the Department of Examinations! Self Assessment for Students!

தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கான அகமதிப்பீடு!

கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நடப்பு கல்வி ஆண்டில் பயிலும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு வரும் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது.

மேலும் இவர்களுக்கு இம்மாதம் செய்முறை தேர்வு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண்கள் இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து இது தொடர்பாக அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் www.dge1.tn.gov.in என்ற அரசு தேர்வுகள் இணையதளத்தில் சென்று அவரவர்களுக்கென வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவு செய்யலாம்.

மேலும் இதற்கான கால அவகாசம் வரும் பிப்ரவரி 17 முதல் 28 ஆம் தேதி கொடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை தலைமை ஆசிரியர்கள் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து மார்ச் 2 ஆம் தேதிக்குள் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர்கள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Previous articleஅரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி இந்த தகுதி இல்லையென்றால் ரேஷன் அட்டை கிடையாது!
Next articleஇந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் சேவை!