முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! கவர்னர் மாளிகை நோக்கி பேரணி!

Photo of author

By Parthipan K

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! கவர்னர் மாளிகை நோக்கி பேரணி!

Parthipan K

Announcement made by the Chief Minister! Rally to the Governor's House!

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! கவர்னர் மாளிகை நோக்கி பேரணி!

கேரளா மாநிலத்தில் பல்கலைக்கழக நியமனங்கள் தொடங்கி பல்வேறு சிக்கல் தொடர்பாக மாநில அரசிற்கும், கவர்னருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகின்றது.இந்நிலையில் பல்கலைக்கழக வேந்தர் பதவியை நீக்குவது தொடர்பாக சட்டசபையில் மசோதா நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.அதனையடுத்து கவர்னரை கண்டித்து வருகிற 15 ஆம் தேதி கவர்னர் மாளிகையை நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த இடது முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செயல்படுவதாகவும் கவர்னர் ஆரிப் முகம்மது கான் கூறுகின்றார்.மேலும் அவர் பொது விவாதம் நடத்த தயார் என்றும் கவர்னர் மாளிகைக்கு வந்து பாருங்கள் என்றும் சாவல் விடும் வகையில் அவருடைய கருத்துக்களை கூறியுள்ளார்.

அவர் கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில் பினராயி விஜயன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் கேரளாவில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியாததால் அரசியல் சாசனத்திற்கு எதிராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க கவர்னர் மூலம் சதி நடகின்றது.

நாட்டில் முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டிய நிறுவனங்கள் ,இடங்கள் அனைத்தும் தற்போது தனியார் மயமாக்கப்பட்டுள்ளது.மாநில அரசுக்கு உரிமைப்பட்ட பொது நிறுவனங்கள் அனுமதி இல்லாமல் மத்திய அரசு தனியாருக்கு விற்கப்படுகின்றது.ரயில்வே துறையில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறினார்கள் ,ஆனால் பத்து லட்சம் பேர் வேலையில் பணி அமர்த்தாமல் காலியாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.