தன்னுடைய அரசியல் விமர்சகர் மற்றும் சவுக்கும் மீடியா என்ற ஊடகத்திற்கும் முழுவதுமாக விடுப்பு வழங்க இருப்பதாகவும் இதனால் தன்னுடைய தாயின் உயிருக்கு ஆபத்து நேர்ந்ததாகவும் சுட்டிக்காட்டி இனி ஊடக துறையில் தான் பணிபுரிய போவதில்லை என சவுக்கு சங்கர் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
Youtube வீடியோவில் சவுக்கு ஷங்கர் தெரிவித்திருப்பதாவது :-
( மார்ச் 24 ) நேற்று வெளியிட்டிருந்த வீடியோவை, காலை 9.30 மணி அளவில் தன்னுடைய வீட்டிற்கு துப்புரவு பணியாளர்கள் என கூறிக்கொண்டு 30 பேர் ஒரு வேனில் வந்ததாகவும் அவர்கள் தன்னுடைய வாகனத்தை அடித்து நொறுக்கிய பொழுது தான் தன்னுடைய தாய்க்கு அழைத்து பத்திரமாக இருக்கும் படியும் அதனை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் வழங்கியதையும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அதற்குள் தங்கள் வீட்டின் பின் கதவை உடைத்து அவர்கள் வீட்டில் உள்ள சமையலறை படுக்கையறை என அனைத்தையும் அடித்து உடைந்து மலம் சாக்கடை போன்றவற்றை அங்கு கொண்டு சென்றதாகவும் அதனை தொடர்ந்து தன்னுடைய தாயின் செல் ஃபோனில் இருந்து வீடியோ கால் மூலமாக அழைத்து தாயை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் அது சார்ந்த சில சிசிடிவி வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
அதன் பின்பு காவல்துறை அந்த இடத்திற்கு சென்று அதாவது காவல்துறையிலிருந்து ஒரு ஆய்வாளர் ஒரு காவலர் என இருவர் மட்டுமே அந்த இடத்திற்கு சென்று தன் தாயின் உடைய செல்போனை மீட்டு அவரிடமே கொடுக்கப்பட்டு விட்டது என்றும் அவர் பத்திரமாக இருக்கிறார் என்றும் தனக்கு தெரியப்படுத்தியதாகவும் ஆனால் அங்கு வந்த அந்த 30 பேர் களையாமல் தன் வீட்டின் முன்னே தர்ணாவில் ஈடுபட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த ஊடகத்தினை தான் திறந்த பொழுது அரசின் உடைய குற்றங்களை சுட்டிக்காட்டி மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த சவுக்கு மீடியா என்ற youtube சேனலை தொடங்கியதாகவும் ஆனால் தற்பொழுது அதனால் தன்னுடைய தாயின் உயிருக்கு ஆபத்து நேர்ந்ததால் இனி முழுவதுமாக ஊடகத்தை விட்டு தான் விலகுவதாக தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே இவர் சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்காக சிறைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் துப்புரவாளர்கள் குறித்து தவறான கருத்துக்களை பேசியதால் இது போன்றதொரு நிகழ்வு ஏற்பட்டதாகவும் ஆனால் இதை யாரால் ஏற்பட்டது என்பது உங்களுக்கு தெரியும் என்று அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.