Breaking News

அனைவரும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாள் அறிவிப்பு!!

Announcement of Erode East by-election day which everyone was waiting for!!

ஈரோடு: கடந்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சி திணறல் காரணமாக அனுமதிக்கப்ட்டார். மேலும்  ஒரு மாதம் காலம் மருத்துவமனையில் தங்கி இருந்த நிலையில் அவர் கடந்த மாதம் காலமானார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானாதாக அறிவிக்கப்பட்டது.

அதனை அடுத்து அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் 5-ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வரும் 10-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த 8 நாளில் பொங்கல் பண்டிகை விடுமுறை தினம் போக வருகிற 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) 13-ம் தேதி (திங்கட்கிழமை) 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்புமனு தாக்கல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டும் தான் அளிக்க முடியும்.