தமிழகத்தில் அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை தேதிகள் அறிவிப்பு!! 10th மற்றும் 12th தேர்வு நாட்கள்!!

Photo of author

By Gayathri

தமிழகத்தை பொருத்தவரையில் அரையாண்டு தேர்வு ஆனது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு நடைபெறுவது வழக்கம்.

அதனை போன்று இந்த வருடமும் அரையாண்டு தேர்வு ஆனது டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களை தேர்விற்காக தயார் செய்து வருகின்றனர். தேர்விற்கான தேதிகள் மட்டுமின்றி தேர்வு முடிந்தபின் எத்தனை நாட்கள் விடுமுறை என்பதனையும் தற்பொழுது அரசு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்வுக்கான தேதிகள் :-

10.12.2024 – செவ்வாய் – தமிழ்

11.12.2024 – புதன் – விருப்ப மொழி பாடம்

12.12.2024 – வியாழன் – ஆங்கிலம்

16.12.2024 – திங்கள் – கணிதம்

19.12.2024 – வியாழன் – அறிவியல்

23.12.2024 – திங்கள் – சமூக அறிவியல்

12 ஆம் வகுப்பு தேர்வுகான தேதிகள் :-

09.12.2024 – திங்கள் – தமிழ்

10.12.2024 – செவ்வாய் – ஆங்கிலம்

12.12.2024 – வியாழன் – கணினிஅறிவியல், கணினிபயன்பாடு, உயிர்வேதியியல், அரசியல் அறிவியல்,புள்ளியியல்

14.12.2024 – சனி – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்

17.12.2024 – செவ்வாய் – கணிதம், விலங்கியல், வணிகம், ஊட்டச்சத்து மற்றும் நீரிழிவு

20.12.2024 – வெள்ளி – வேதியியல், கணக்கியல், புவியியல்

23.12.2024 – திங்கள் – இயற்பியல், பொருளாதாரம்

டிசம்பர் 23ஆம் தேதி தேர்வுகள் முடிவு உள்ள நிலையில், டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை மொத்தம் ஒன்பது நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளும் அடங்கும். மூன்றாவது பருவம் ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.