2025 ஆம் ஆண்டில் பொங்கலுக்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு!! மகிழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்!!

Photo of author

By Gayathri

வருகிற 2025 ஆம் ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு 9 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் 23 என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதில் 3 பொது விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் போய்விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை வருகிறது. ஏற்கனவே 11 12 தேதிகள் சனி ஞாயிறு என்பதால் விடுமுறை தான். போகி பண்டிகை 13-ஆம் தேதி வருகிறது. அன்றும் அரசு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லை என்றாலும் அன்று ஒரு நாள் விடுமுறை எடுத்தால் ஜனவரி 11-ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தொடர் விடுமுறை நாட்கள் தான்.ஜனவரி 17-ஆம் தேதி ஒரு நாள் அரசு விடுமுறை அறிவித்தால் 9 நாட்கள் விடுமுறைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் 2025 ஆம் ஆண்டில் மார்ச் 31-ஆம் தேதி திங்கள் ரம்ஜான், ஏப்ரல் 14-ஆம் தேதி திங்கள் தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 18-ஆம் தேதி புனித வெள்ளி, ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெள்ளியன்று சுதந்திர தினம், செப்டம்பர் 5-ஆம் தேதி வெள்ளி மிலாது நபி, அக்டோபர் 20-ஆம் தேதி திங்கள் தீபாவளி வருவதால் சனி, ஞாயிறு சேர்த்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.