தற்சமயம் விழா என்றாலே மது, டிஜே பார்ட்டி இல்லாமல் நிறைவடைவதில்லை. இந்த விழாக்களில் பொதுவிழாவில் இருந்து, திருமண விழா, சடங்கு முதல் இறப்பு வரை அனைத்தும் அடங்கும். முக்கியமாக மது இல்லாமல் இவை முழுமை பெறாது. அந்த காலத்திலாவது, மது அருந்துவதை மறைத்து செய்தனர். ஆனால், இந்த காலங்களில் சோசியல் ட்ரிங்கிங், ஸ்ட்ரஸ் ட்ரிங்கிங் என சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து வருகின்றனர். இதனால் உடல் நலத்திற்கு ஏற்படும் கேடு குறித்த செய்திகள் ஏறத்தாழ குறைந்து வருகின்றன.
இதை மனதில் கொண்டு தான், சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில், பதிண்டா என்ற மாவட்டத்தில் உள்ள பல்லோ என்ற கிராமத்தில் ஒரு அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த கிராமத்தை சுமார் 5000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பாரம்பரியத்தை மேம்படுத்த, தற்சமயம் நடக்கும் திருமணங்களில் மது, டீஜே பார்ட்டி தவிர்த்தால் அந்த குடும்பத்திற்கு ஊக்கத்தொகையாக ரூ. 21 ஆயிரம் வழங்கப்படும்.
இதுகுறித்து அக்கிராம ஊராட்சி தலைவரான ‘சர்பாஞ்ச் அமர்ஜித் கவுர்’ கூறுகையில், “இதன் மூலம் திருமணத்தின் வீண் செலவு தவிர்க்கப்படும் என்கிறார். மேலும், திருமண விழாக்களில் மது அருந்துவதால் ஏற்படும் தேவையில்லாத பிரச்சனையும் தவிர்க்கப்படும். மேலும், சத்தமாக டிஜே இசைக்கும்போது அந்தப் பகுதி மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்படுகின்றது”. இதனை வலியுறுத்தும் வகையில்தான், ஆடம்பரமற்ற திருமணங்களுக்கு ரூபாய் 21 ஆயிரம் பரிசு அறிவித்துள்ளது கிராம நிர்வாகம்.