தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!!..எப்போது வெளியாகும் நீட் தேர்வின் முடிவுகள்?..
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் எனப்படும் நுழைத்தேர்வு ஒன்றை நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த 17ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு நடைபெற்றது.தமிழ் நாட்டில் மட்டும் பெரும்பாலான மாணவ மற்றும் மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
தேர்வு அறைக்கு செல்வதற்கு முன் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.அதன்படி மாணவர்கள் ஆதார், பான், குடும்ப அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டும். மேலும் செல்போன்களில் கொண்டு வரும் அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
முக்கியமாக வாட்ச், பெல்ட், கம்மல், மூக்குத்தி, தலைகுத்தும் கிளிப் உள்ளிட்டவைகள் அணிந்து வர அனுமதி கிடையாது.அதன்படி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்த நிலையில் வெறும் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் மட்டும் வருகை தந்து தேர்வுகளை எழுதினார்கள்.
இந்நிலையில் நீட் தேர்வுகளை வெளியிடப்படும் தேதியை தேசிய தேர்வு முகவை இன்று அறிவித்துள்ளது.அதன்படி மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7ஆம் தேதியில் வெளியாகும் என தேசிய தேர்வு முகவை தெரிவித்துள்ளது.மேலும் நீட் இளநிலை தேர்வுக்கான இறுதி விடைக்குரிப்புகள் வரும் 30 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.