மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! கோதுமை மாவிற்கு தடை!

0
85
The announcement made by the central government! Ban on wheat flour!
The announcement made by the central government! Ban on wheat flour!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! கோதுமை மாவிற்கு தடை!

உலகளவில் ரஷ்யா, உக்ரைன் கோதுமை ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில்  இரு நாடுகளுக்கும் இடையேயான போரினால் சர்வதேச சந்தையில் கோதுமை விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்திய கோதுமையின் தேவை அதிகரித்துள்ளது. இது நாட்டில் கோதுமை மாவு விலையில் மறைமுக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் கோதுமை மாவு விலை உயர்வை கட்டுக்குள் வைப்பதற்காக அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய  அரசு அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளது  அந்த அறிவிப்பில் கோதுமை மாவு ஏற்றுமதிக்கு தடை விதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கோதுமை மாவு விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு ஏழை மக்களின் உணவுப் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.மேலும் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

author avatar
Parthipan K