திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நாளை முதல் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்!
திருப்பதி ஏழுமலையான் கோவில் என்பது மிகவும் புகழ்பெற்ற தளமாகும். இந்த கோவிலிற்கு உள்ளூர் ,வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
தினந்தோறும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வதால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் படி இலவச டோக்கன் மற்றும் ரூ 300 கட்டணம் செலுத்தி டோக்கன் பெரும் தரிசனம் செய்ய அனுமதித்துள்ளது.
இந்த இலவச டோக்கன் மற்றும் ரூ 300 கட்டண தரிசன டோக்கன்கள் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் சார்பில் மாதந்தோறும் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகிறது.அந்த வகையில் டிசம்பர் மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட்கள் நாளை காலை பத்து மணிக்கு தேவஸ்தானத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தினமும் 35ஆயிரம் டிக்கெட் வீதம் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
அதனைதொடர்ந்து முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் வரும் 27ஆம் தேதி அன்று காலை 10மணிக்கு அதே இணையதளம் மூலம் திருமலையில் தங்கும் இடத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.