அரியர் மாணவர்களை தேர்ச்சி என அறிவிப்பது கேலிக்கூத்தானது!! துணைவேந்தரின் கடுமையான எதிர்ப்பு

Photo of author

By Parthipan K

ஆரியர் மாணவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அறிவித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்த முதல்வர் எடப்பாடியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கடுமையாக சாடியுள்ளார்.

கல்லூரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வினைத் தவிர மற்ற படங்களில் அரியர் வைத்தவர்கள், கட்டணம் செலுத்தி தேர்வு எழுதுவதற்காக காத்திருப்பவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் 10 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்கள் தேர்வு எழுத பணம் செலுத்தி இருக்கும் நிலையில், அவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பானது மாணவர்களுக்கு மிகுந்த வரவேற்பு அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் எடப்பாடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஈரோட்டில் பேனர் ஒன்றினை அடித்து முதலமைச்சரை வாழ்த்தி இருந்தனர்.

தற்போது அரியர் மாணவர்கள் தேர்ச்சி என அறிவிப்பது தவறான முடிவு என வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் துணைவேந்தரும், யுபிஎஸ்சி உறுப்பினருமான பாலகுருசாமி எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்தில், “தேர்தல் அரசியலுக்காகவும், மாணவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கேற்ப தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என பல்கலைக்கழகங்கள் அறிவிக்க முடியாது.

பல்கலைக் கலாம் என்பது ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். இவ்வாறு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க சிண்டிகேட் மற்றும் செனட் சபைக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது. பல்கலைக் கழக தேர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அரசுகள் முடிவு எடுப்பதற்கு எந்த அதிகாரமும் கிடையாது.

பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து துணை வேந்தர்களும் விழிப்புடன் இருக்கவேண்டிய சூழல் ஆகும். பல்கலைக்கழகங்களின் கல்வித்தரத்தை கற்பதுவே துணைவேந்தர்களின் கடமையாகும்.

மேலும் 10 அரியர்கள் வைத்துக் கொண்டும், 10 ஆண்டுகளாகவும், பெரும்பாலான படங்களில் 20 மதிப்பெண்களுக்கு குறைவாகவே எடுத்து அரியர் வைக்கும் மாணவர்களுக்கும், தேர்விற்கு பணம் செலுத்தி விட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்களை தேர்ச்சி என அறிவிப்பது கேலிக்கூத்தான விஷயமாகும்.

இதுபோன்ற நடவடிக்கைகள்தான் கல்வியின் தரத்தை குறைப்பதாக இருக்கும். அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் இதுபோன்ற முடிவுகளை அம்பலப்படுத்துவது நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

இது தொடர்பாக உறுதியான முடிவினை அனைத்து பல்கலைக்கழகங்களும் எடுக்க வேண்டும்” என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.