இனி புகார் அளிக்க காவல்நிலையம் செல்லத் தேவையில்லை:!

0
79

12 துணை காவல் ஆணையர்களின் தொலைபேசி எண்களை வெளியிட்ட மாவட்ட காவல் ஆணையர்!

சென்னை மாவட்ட காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் கடந்த ஜூலை மாதத்தில், கொரோனா காலத்தின் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு,பொதுமக்கள் தங்களின் புகார்களை வாட்ஸ்அப் வீடியோகாலின் மூலம் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தார்.இவரின் அணுகுமுறை மக்களுக்கு பெரிதும் பயன் பெறுவதாக இருந்ததினால் சென்னை பொதுமக்கள்,இந்த திட்டத்தினை விரிவுபடுத்த தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று,தமிழக அரசு மற்றும் சென்னை மாவட்ட காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலின் உத்தரவின் பெயரில் 12 காவல் ஆணையர்களின் தொலைபேசி எண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.மக்கள் தங்களின் புகார்களை,செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 12:00 மணி முதல் 1 மணி வரை தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களில் விவரங்கள்

1. துணை ஆணையாளர், மைலாப்பூர் மாவட்டம் 63811 00100

2. துணை ஆணையாளர், தியாகராய நகர் மாவட்டம் 90030 84100.

3.துணை ஆணையாளர், பூக்கடை மாவட்டம் 94980 08577.

4. துணை ஆணையாளர், புனித தோமையார் மலை மாவட்டம் 70101 10833.

5. துணை ஆணையாளர், அடையாறு மாவட்டம் 87544 01111.

6. துணை ஆணையாளர், வண்ணாரப்பேட்டை மாவட்டம் 94981 33110.

7. துணை ஆணையாளர், புளியந்தோப்பு மாவட்டம் 63694 23245.

8. துணை ஆணையாளர், திருவல்லிக்கேணி மாவட்டம் 94981 81387.

9. துணை ஆணையாளர், கீழ்ப்பாக்கம் மாவட்டம் 94980 10605.

10. துணை ஆணையாளர், அண்ணாநகர் மாவட்டம் 91764 26100.

11. துணை ஆணையாளர், மாதவரம் மாவட்டம் 94981 81385.

12. துணை ஆணையாளர், அம்பத்தூர் மாவட்டம் 91764 27100.

மேலும், பொதுமக்கள் தங்கள் குறைகளைச் சுருக்கமாக வாட்ஸ் அப் தகவல் வழியாக ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள 63691 00100 என்ற எண்ணிற்கும் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்குறைகளை ஆராய்ந்த பின்னர் தேவைப்படும் புகார்தாரர்களை காவல் ஆணையர் வீடியோ கால் மூலம் நேரடியாகத் தொடர்பு கொள்வார்.

பிற சாதாரண குறைகள், சம்பந்தப்பட்ட புகார்கள் சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையர்களுக்கு நடவடிக்கை எடுக்க அனுப்பப்படும்.

இவ்வாறு சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

author avatar
Pavithra