நடுவானில் பெண் மீது சிறுநீர் அபிஷேகம்! போதை ஆசாமி விமானத்தில் பறக்க தடை!

நடுவானில் பெண் மீது சிறுநீர் அபிஷேகம்! போதை ஆசாமி விமானத்தில் பறக்க தடை!

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது பெண் பயணி ஒருவர் மீது போதை ஆசாமி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அந்த நபரை விமான தடை பட்டியலில் வைக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஏர் இந்தியாவின் விமானம் ஜேஎப்கே அமெரிக்காவில் இருந்து  டெல்லிக்கு  நவம்பர் 26,2022 அன்று வந்து கொண்டிருந்தபோது வணிக வகுப்பில்  அன்று பயணம் செய்த பயணி ஒருவர் உணவுக்குப் பின் கேபின் விளக்குகள் அணைக்கப்பட்டபோது பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்ததாக தகவல் தெரியவந்தது. இதனால் அந்தப் பெண் பயணியின் பை உடைகள் மற்றும் காலணிகள் சிறுநீரில் நனைந்திருந்தன.

அவருக்கு உடனடியாக உடைகள் மற்றும் காலணிகள் வழங்கப்பட்டு அவரது இருக்கைக்கு திரும்பும் படியும் பல முதல் வகுப்பு இருக்கைகள் காலியாக இருந்த போதும் தான் ஒரு குழுக்கள் உள்ள இருக்கையில் பயணிக்க நேர்ந்ததாகவும் அந்த பெண் புகார் கூறினார்.  மேலும் விமானம் தரையிறங்கிய பின்பு அந்த நபரை சுதந்திரமாக விமான குழுவினர் நடமாட விட்டதாகவும் அந்த பெண் கூறினார்.

இதனை அடுத்து அந்த புகாரை பற்றி விசாரித்த நிறுவனம் ஒரு குழுவை அமைத்து விசாரித்து அந்தப் பயணி இனிமேல் எந்த விமானத்திலும் பயணிக்க முடியாத தடை உத்தரவு பிறப்பிக்க தற்போது இந்த விவகாரம் அரசு ஆய்வு குழுவிடம் உள்ளது. அரசு ஆய்வுக் குழுவின் முடிவுக்காக ஏர் இந்தியா நிர்வாகம் காத்துக் கொண்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தால் இந்த புகார் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

 

Leave a Comment